முதியவர் ஒருவர் ரூ.80 கோடி மின்கட்டணம் வந்ததால் அதிர்ச்சியில் மயங்கி விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மின்சார வாரியத்தின் மூலமாக வீடுகளில் மற்றும் வர்த்தக நிறுவனங்களிலும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்கு அளவீடு செய்யப்பட்டு அதற்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை ஆன்லைன் மூலமாகவோ அல்லது மின்வாரிய அலுவலகங்களுக்கு நேரடியாகவோ சென்று பெற்றுக்கொள்ளலாம். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்வாரிய ஊழியர்கள் வந்து மின் கட்டணத்தை அளவீடு செய்வார்கள்.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் கன்பத் நாயக் என்ற 80 வயது முதியவர் ஒருவருக்கு ரூபாய் 80 கோடி மின் கட்டணம் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்கனவே இதயநோய் இருந்துள்ளது. இதையடுத்து அவர் 80 கோடி மின்தொகையை பார்த்தவுடன் மயங்கி விழுந்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.