Categories
அரசியல்

அடேங்கப்பா….! ரொம்பத்தான் மிரட்டுறீங்க…. அப்படி என்ன செய்வீங்கன்னு கொஞ்சம் சொல்லுங்களே….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை தொடர்ந்து பாஜக தரப்பில் கலந்துகொண்ட வானதி ஸ்ரீனிவாசன் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறியதாவது, தமிழக அமைச்சரவையின் அறிவுரையின் படி தான், தமிழக கவர்னர் செயல்பட வேண்டும். அதற்கு புறம்பாக செயல்பட்டால், அதற்குரிய விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன் என்றார்.
தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தனது அறிக்கையில் கூறியதாவது, ” ‘நீட்’ தேர்வுக்கு எதிரான சட்ட போராட்டத்தை நடத்துவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், ‘தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன், முதல் கையெழுத்திலேயே நீட் தேர்வை நீக்கி விடுவோம்’ என்று கூறினாரே, உதயநிதி ஸ்டாலின் அது என்னவாயிற்று இவர்கள்அனைவரும் நடத்தும் நாடகமே இந்த நீட் எதிர்ப்பு!” என பேசினார்

தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி கூறியதாவது, ‘முதுகலைமருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு செல்லும்’ என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு, வரலாற்று சிறப்பு மிக்கது. இது, மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து வரும் முதல்வர் ஸ்டாலினின் உறுதியான நிலைப்பாட்டிற்கு கிடைத்த அங்கீகாரம்.” என்று கூறினார். தமிழக மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் எனது அறிக்கை கூறியிருப்பதாவது, “பா.ஜ., மட்டுமே நீட்டை ஆதரிக்கிறது. அதிலிருந்தே, நீட் தமிழர்களுக்கு மகா கேடு என்பதை புரிந்து கொள்ளலாம்.
தி.மு.க., கூட்டணி கட்சிகள் எதிர்த்து, அதை, பா.ஜ., ஆதரிக்கிறது என்றால், அந்த திட்டம், நாட்டு மக்களுக்கு நல்ல திட்டமாகத் தான் இருக்கும் என்பதே, தமிழக மக்களின் திடமான எண்ணமாக இருக்கிறது.” எனக் கூறினார்.

தமிழக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் கூறியதாவது, ” உத்தர பிரதேசம் மற்றும் தமிழகத்திற்கு ஒரே நாளில், ராணுவ தளவாடங்களை தயாரிக்க திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், உ.பி.,க்கு மத்திய அரசு மூலம், 4,000 கோடி ரூபாய் முதலீடு வந்து உள்ளது. ஆனால், தமிழகத்திற்கு வரவில்லை.” எனக் கூறினார். தமிழக பா.ஜ., பொறுப்பாளர்,சி.டி.ரவி அறிக்கை கூறியதாவது “உ.பி., கோவா உள்ளிட்ட, ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பா.ஜ., வெற்றிக்கு கட்சியினர் அனைவரும் பாடுபட வேண்டும். ஓட்டு எண்ணப்படும் மார்ச் 10ம் நாளை வெற்றியுடன் கொண்டாடுவோம்.” எனக் கூறினார்.

Categories

Tech |