தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் பீஸ்ட் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை நெல்சன் இயக்க, அனிருத் இசையமைத்து இருந்தார். இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாவிட்டாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்நிலையில் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் ரஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, பிரகாஷ் ராஜ், ஷியாம், பிரபு மற்றும் சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஹைதராபாத் மற்றும் சென்னையில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதனையடுத்து தற்போது வாரிசு படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ரைட்ஸ் வீடியோ மிகப்பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ளது. அதன்படி சாட்டிலைட் உரிமை 50 கோடி ரூபாய்க்கும், டிஜிட்டல் ரைட்ஸ் 60 கோடி ரூபாய்க்கும், பாடல்கள் 10 கோடி ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் படம் வெளியாவதற்கு முன்பாகவே 120 கோடிக்கு விற்பனையானது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.