தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனதுகென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகர் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ ரைட்ஸ் மட்டும் ரூ.10 கோடிக்கு விற்று உள்ளதாக தகவல் வெளியுள்ளது. இதுவே விஜயின் திரை வாழ்க்கையில் தி பெஸ்ட் ஆடியோ பிஸ்னஸ் என்று கூறப்படுகிறது. மேலும் வாரிசு திரைப்படம் ரிலீசுக்கு முன்பே பல கோடிகளை வசூலித்து வருகிறது.