பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியாபட். பிரபல நடிகைகள் ஒவ்வொருவரும் வைத்திருக்கும் சமூகவலைதளப் பக்கத்தில் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தனியார் தயாரிப்புகளுக்கும் திரைப்படங்களின் விளம்பரத்திற்கும் இந்த பக்கத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், நடிகை ஆலியாபட் சமூகவலைதளப் பக்கத்தில் ஒரு படத்தை விளம்பரம் செய்ய ஒரு கோடி ரூபாய் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் ஒரு விளம்பரத்திற்கு ஒரு கோடியா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.