தென் மாநிலங்களான தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு நகரங்கள் வெள்ளத்தால் தத்தளித்து வருகிறது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை இரவு முதலே நல்ல மழை பெய்துள்ளது. இதனால் திருப்பதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சாலைகளில் வெள்ளநீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர் .
வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திருமலையில் நேற்று காலை 2 மணி நேரத்தில் 165 மில்லி மீட்டர் அளவிற்கு கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது. தற்போது பாபவினாசனம், கோகர்பாம் அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் திருமலையில் வசிக்கும் மக்கள் மற்றும் பக்தர்களுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தேவையான நீர் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.