பண்டிகைக் காலம் என்றாலே வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு பொருள்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏராளமான பொருட்களை வாடிக்கையாளர்கள் வாங்கி செல்கின்றனர். அந்த வகையில் தற்போது அக்டோபர் மாதம் தொடங்கி விட்டதால் பண்டிகை காலம் நெருங்கி விட்டது. எனவே இதனை முன்னிட்டு அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. தள்ளுபடி விலையில் பொருட்களை வழங்குவது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு கேஷ் பேக் சலுகைகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதை பயன்படுத்தி ஒரு சில வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்களை வாங்கி வருகின்றனர். இதனால் ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் விற்பனையில் அதிக லாபம் ஈட்டி வருகிறது .அந்த வகையில் ஷியோமி நிறுவனம், பண்டிகைக்கால தள்ளுபடி விற்பனையில் வெறும் 5 நாட்களில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமின்றி அமேசன் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் மற்றும் பிலிப்கார்ட் பிக் பில்லியன் டே போன்ற சலுகை திட்டங்களால் ஷியோமி ஸ்மார்ட் போன் விற்பனை இன்னும் அதிகமாக விற்பனையாகியுள்ளது. ரெட் மி நோட் 10 புரோ செல்போன்களுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டது .இதுபோன்ற தள்ளுபடி அறிவிப்புகளின் காரணமாக ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிரடியாக உயர்ந்துள்ளது.