Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா!… வெள்ளாடு பறவைகள் சரணாலயத்திற்கு சர்வதேச அங்கீகாரம்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பறவைகள் சரணாலயம், ஈரோடு மாவட்ட மக்களின் பொழுதுபோக்கு தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு சமூக நலக்காடுகள் கோட்டம் மூலமாக கருவேல மரங்கள் நடவு செய்யப்பட்டு வளர்க்கப்பட்டன. அதுமட்டுமில்லாமல் பாதுகாக்கப்பட்ட பகுதியாக விளங்கிய பெரிய குளம் ஏரியில் கட்லா, ரோகு, கெண்டை, விரால் உள்ளிட்ட மீன் வகைகள் வளர்க்கப்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பறவைகள் வெள்ளோடு பெரியகுளம் ஏரியை நோக்கி பறந்து வந்தது. இங்கு ஏற்கனவே கருவேல மரங்கள் வளர்ந்து இருந்ததால் பறவைகள் இங்கேயே வசித்து கூடு கட்டி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்ய தொடங்கியாது. இதனையடுத்து  பறவைகள் சரணாலயம் சாம்பல்நாரை, ராக்கொக்கு, பாம்புதாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், கரண்ட்டி வாயன், புள்ளிமூக்கு வாத்து, தட்டை வாயன், வெண்புருவ வாத்து, புள்ளி அலகு கூழைக்கடா போன்ற அரியவகை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வசிக்க சிறந்த சீதோஷ்ண நிலையை கொண்ட பகுதியாக பெரிய குளம் ஏரி மாறியது.

எனவே பறவைகள் இனப்பெருக்கம் செய்ய ஏற்ற இடமாக இது உருமாறியது. இதனால் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்தது.  அதனை தொடர்ந்து வெள்ளோடு பெரிய குளம் ஏரி கடந்த 2000-ம் ஆண்டு வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ன் படி பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. 121 வகை பறவைகள் இந்த பறவைகள் சரணாலயம் ஈரோடு மாவட்ட வனக்கோட்ட மாவட்ட வன அதிகாரியின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டுவரை இங்கு பல்வேறு மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டது. ஏரி தூர்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டன. அதுமட்டுமில்லாமல் பறவைகள் வந்து இனப்பெருக்கம் செய்ய கூடுதலாக மரங்கள் நடவு செய்யப்பட்டது. இதனால் பல வெளிநாட்டு பறவைகள் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தை நோக்கி படை எடுக்கவும் காரணமாக அமைந்தது.

எனவே சரணாலயத்தில் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இதனை  வனத்துறையினர் மற்றும் பறவை ஆர்வலர்கள் இணைந்து நடத்தினர். இந்த பணியின் முடிவில் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் 121 வகை பறவைகள் இருப்பதும், 23, 427 பறவைகள் இருக்கிறது என்று தெரியவந்தது.  இங்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் வசிப்பதால், வெள்ளோடு பறவைகள் சரணாலயம் அமைந்து உள்ள பெரிய குளம் ஏரியை பாதுகாக்கும் வகையில் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலம் என்ற அங்கீகாரத்தை பெறும் என்று ராம்சர் அமைப்புக்கு அரசு சார்பில் முன்மொழியப்பட்டது. இதனையடுத்து வெள்ளோடு பறவைகள் சரணாயலம் குறித்த அறிக்கை இந்த ராம்சர் அமைப்பால் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் இந்த சரணாலயம் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலம் என்ற ராம்சர் அங்கீகாரத்தை பெற்று உள்ளது. \

 

Categories

Tech |