நாமக்கல் மாவட்டத்தில் மின் அலுவலகம் நடைமுறைப்படுத்த பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியராக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் முன்னிலை வைத்தார் முன்னிலை வகித்தார். அரசின் அனைத்து துறை அலுவலக கலந்து கொண்ட இந்த ஆய்வு கூட்டத்தில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் காகிதம் இல்லா அலுவலகம் நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள், வாய்ப்புகள் ஆகியவற்றில் துறை அலுவலர்களின் கருத்துக்களை அமைச்சர் மனோ தங்கராஜ் கேட்டறிந்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், அரசு திட்டங்களுக்கு யார் தகுதியானவர்கள் என்ற தரவுகளை உடனுக்குடன் பெற்றிட முடியும். மேலும் இ-சேவை மையங்கள் மூலம் 200 ஆக இருந்து வந்த அரசியல் சேவைகள் தற்போது 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் படிப்படியாக அரசு அனைத்து துறை சேவைகளும் இந்த மையங்கள் மூலம் வழங்கப்படும். அரசு அலுவலகங்கள் முழுவதும் மின்- அலுவலகங்களாக மாற்றப்படும். நாமக்கல் போன்ற வளரும் மாவட்டங்களில் படித்த இளைஞர்களுக்கு திறன்களை பயன்படுத்தி தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைத்து அதன் அடிப்படையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்க கூடும்.
அதனை தொடர்ந்து தமிழக அரசு அறிவித்ததை போல ஸ்மார்ட் கவர்னன்ஸ் என்பதே உள்ளடக்கி இதுபோன்ற மின் அலுவலக திட்டங்களை இனிவரும் காலங்களில் முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்த உள்ளம். இதன் மூலம் அரசு அலுவலகங்களில் காகிதங்கள் பயன்படுத்துவது குறைக்கப்பட்டு, அரசு பணியாளர்களுக்கு அவர்கள் பணிகளை விரைந்து செய்ய முடியும்.கொல்லிமலையில் எளிதான இணையதளம் மற்றும் தொலைபேசி சேவைக்காக ரூ.4 கோடி மதிப்பீட்டில் தொலைபேசி கோபுரம் அமைக்க ஆதிதிராவிட நலத்து றைக்கு மாவட்ட நிர்வாகம் முன்மொழிவு அனுப்பியுள்ளது. இதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் பல டவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனையடுத்து தமிழகம் முழுவதும் வெகு விரைவில் 12525 கிராமங்கள் பைபர் நெட் மூலம் இணையதள சேவையை பெற முடியும். அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழக அரசு பொறுப்புடன் தகவல் தொழில்நுட்பத் துறை வேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது. இந்தத் துறை 16 வது இடத்தில் இருந்து 3 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. டிஜிட்டல் சேவைகள் வழங்குவதில் 17வது இடத்தில் இருந்த 2 வது இடத்திற்கு தமிழக முன்னேறி நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. விரைவில் அனைத்து மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு துறை அலுவலகம் டிஜிட்டல் மையமாக்கப்படும் என்றும் நாமக்கல் மாவட்டத்தில் எல்காட் மூலமாக ஐடி பார்க் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.