Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா….! வைரம் பதித்த சேவல் கொடி…. 70 லட்ச ரூபாய் மதிப்புள்ள காணிக்கை…. சிறப்பு வழிபாடு…!!

70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரம் பதித்த சேவல் கொடி காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர்மலையில் புகழ்பெற்ற 6-வது படைவீடான சோலைமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முருக பக்தரான சுப்பையா செட்டியார்- சரோஜா தம்பதியினர் சென்றுள்ளனர். இவர்கள் 70 லட்ச ரூபாய் மதிப்புள்ள புதிய வைர சேவல் கொடியை கோவிலுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் யாக சாலையில் அமைக்கப்பட்ட பூ மேடையில் சேவல் கொடியை வைத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் மற்றும் மங்கள இசையுடன் பூஜைகள் நடத்தியுள்ளனர். இதனையடுத்து மேளதாளங்கள் முழங்க சேவல் கொடி மூலவர் சன்னதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் அமைச்சர் மூர்த்தி, கோவில் துணை ஆணையாளர் அனிதா மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Categories

Tech |