பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் தன்னை கொடுமைப்படுத்தியதாக அவருடைய முன்னாள் மனைவி நடிகை ஆம்பர் ஹெர்ட் பத்திரிகை ஒன்றில் எழுதி இருந்தார். அதில் அவருடைய பெயரை குறிப்பிட விட்டாலும் அனைவருக்கும் அது யார் என்பது புரிந்து விட்டது. இதையடுத்து 50 மில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார் டெப். இந்த வழக்கில் ஜானி டெப்பிற்கு வெற்றி கிடைத்தது. இதனையடுத்து இங்கிலாந்து சென்றிருக்கும் டெப் பல்வேறு ஹோட்டல்களுக்கு சென்று வருகிறார்.
அதன்படி பிர்மிங்காம் பகுதியிலிருக்கும் இந்திய ஹோட்டலுக்குச் சென்றுள்ளார். அங்குள்ள உணவு பிடித்துப்போகவே ரூபாய் 49 லட்சம் டிப்ஸாக கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த உணவகம் தெரிவிக்கையில், ஜானி டெப் மற்றும் அவருடைய நண்பர்கள் எங்களுடைய உணவகத்திற்கு வந்தது எங்களுக்கு கிடைத்த கவுரவம். நாங்கள் அளித்த உணவு அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் டிப்ஸ் கொடுத்தார்கள் என்று தெரிவித்துள்ளது.