Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! 1 நாளைக்கு இத்தன கோடியா….? சத்யராஜின் சம்பளத்தை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். இவர் ஹீரோ, வில்லன், குணசத்திர வேடம்  என எதை ஏற்றாலும் அதற்கு தகுந்தவாறு கச்சிதமாக தன்னை மாற்றிக் கொண்டு சிறப்பாக நடித்து அசத்துவார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் தற்போது நடித்து வருகிறார். இவர் பாகுபலி படத்தில் நடித்திருந்த கட்டப்பா வேடம் ரசிகர்களால் மிகவும் பேசப்பட்ட ஒரு கதாபாத்திரமாக இருந்தது. இவர் தற்போது பல்வேறு புதிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தற்போது உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சித்தார்த் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிகர் சத்யராஜை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது போலீஸ் வேடத்தில் சத்யராஜை நடிக்க வைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் நடிகர் சத்யராஜ் படத்தில் நடிப்பதற்கு ஒரு நாளைக்கு ரூபாய் 1 கோடி வரை சம்பளம் வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பளத்தால் லைகா நிறுவனம் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறது. மேலும் நடிகர் சத்யராஜனுடன் சம்பளம் குறித்து லைகா நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்துவதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |