Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!… 10 லட்சம் வியூவெர்ஸா?…. கவனம் ஈர்க்கும் ஶ்ரீகாந்த் பட பாடல்….!!!!

அறிமுக டிரைக்டர் பிரகாஷ் ராகவதாஸ் இயக்கத்தில் ஶ்ரீகாந்த் மற்றும் வெற்றி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் “தீங்கிரை”. இந்த படத்தில் கதாநாயகிகளாக  அபூர்வாராவ் மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் நடிக்கின்றனர். சஹானா ஸ்டுடியோஸ் மற்றும் டிடபுள்யூடி மீடியா தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹரிஷ் அர்ஜுன் பின்னணி இசை அமைத்துள்ளார்.

சைக்கோ கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. அத்துடன் இப்படத்தில் சித் ஸ்ரீராம் பாடிய “அவிழாத காலை” எனும் ரொமான்டிக் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.

 

Categories

Tech |