புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொம்மாடிமலையில் இருக்கும் குடியிருப்பு பகுதியில் வைக்கோல் போர் உள்ளது. இந்த வைக்கோல் போரில் மலைப்பாம்பு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு வைக்கோல் போரில் இருந்த மலைப்பாம்பை உயிருடன் பிடித்தனர். இதனையடுத்து 12 நீளமுள்ள மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் வனத்துறையினர் அந்த பாம்பை நார்த்தாமலை காப்பு காட்டில் கொண்டு விட்டனர்.
Categories