பிரேசில் நாட்டில் ‘அண்ட்ரெலினோ வியர டி சில்வா’ என்பவர் தனது 121 வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
பிரேசில் நாட்டின் அபரேசிடா டி கோயானியா நகரில் வசித்து வருபவர் ‘அண்ட்ரெலினோ வியர டி சில்வா’. இவர் பிப்ரவரி 3 ஆம் தேதி தனது 121 வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
மேலும் அண்ட்ரெலினோ வியர டி சில்வாவின் அடையாள அட்டையில் இருக்கும் தகவல்கள் உண்மையாக இருந்தால். உலகில் உள்ளவர்களில் அதிக வயதான நபர் என்கிற பெருமையை ‘அண்ட்ரெலினோ வியர டி சில்வா’ பெறுவார்