சிவகங்கை மாவட்டம் சூரக்குளம் கிராமத்தை சேர்ந்த தம்பதிகள் வினோத்குமார்- கற்பகவல்லி இவர்களுடைய மகன் சாலிவாகனன்(5). இந்த சிறுவன் சிறு வயதிலேயே தன்னுடைய அம்மாவின் சேலையை மரத்தில் கட்டி ஏறி விளையாடி வந்துள்ளார். இதனை கண்ட அவருடைய பெற்றோர்கள் ஊக்கப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் தற்சமயம் அந்த சிறுவன் கயிற்றில் வேகவேகமாக ஏறி பயிற்சி பெற்றதுடன் தற்போது 14 அடி கயிறில் 23 நொடிகளில் ஏறி சோழன் புக் ஆப் ரெக்கார்டஸ் இல் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் 60 நொடிகளில் 20 அடி சாதனையாக உள்ள நிலையில் அந்த சாதனையை இந்த சிறுவன் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுவனின் இந்த சாதனைக்கு பலரும் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.