கேரளாவின் கொச்சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் ஐ.என்.எஸ்., விக்ராந்த் கப்பலை, பிரதமர் நரேந்திரமோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதனால் இந்தியாவுக்கு அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டன் போன்ற நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த கப்பலில் உள்ள சிறப்பம்சங்கள் பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.
# ஐ.என்.எஸ், விக்ராந்த் 2 கால்பந்து மைதானத்தின் பரப்பளவை கொண்டது.
# இந்த கப்பலில் மொத்தம் 18 மாடிகள் உள்ளது.
# கப்பலில் உள்ள பிரம்மாண்ட சமையலறையில் இருக்கும் தானியங்கி இயந்திரத்தின் மூலம் தினசரி 16,000 சப்பாத்திகள், 6 ஆயிரம் இட்லிகள் தயாரிக்க முடியும்.
# கப்பல் முழுவதும் செய்யப்பட்டுள்ள வயரிங் வேலைகள் 2,500 கி.மீ நீளம் உடையது.
# கப்பலின் மேல் தளத்தில் 30 போர்விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை நிறுத்தி வைக்க இயலும்.
# கப்பலை முழுமையாக சுற்றிவர 12 கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும்.
# மேலும் கப்பலில் மருத்துவமனையும் இயங்கி வருகிறது. இதில் 16 படுக்கை வசதிகள் இருக்கிறது. அத்துடன் 2 அறுவை சிகிச்சை கூடங்கள், தீவிர சிகிச்சை பிரிவு, பரிசோதனை கூடங்கள் போன்ற வசதிகளும் உள்ளடங்கும்.