விக்டோரியன் ஹோம் என்ற பழமையான வீட்டை வண்டியில் ஏற்றிச்சென்று மாற்றியமைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோ என்ற பகுதியில் சுமார் 139 ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்டுள்ள கலை வேலைப்பாடுகள் கூடிய பழமையான வீடு ஒன்று அடியோடு பெயர்க்கப்பட்டது. பின்னர் அது சுமார் 482 மீட்டருக்கு அப்பால் உள்ள காலியான இடத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது. இந்த பழமையான வீடு நகரின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க வில்லை என்பதால் அந்த வீட்டை இடிக்காமல் நவீன தொழில்நுட்பத்துடன் அதனை அடியோடு தூக்கி நகர்த்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. மேலும் இந்த வீட்டை அடியோடு நகர்த்த மட்டும் நம் இந்திய மதிப்பில் சுமார் 3 கோடி ரூபாய் அமெரிக்க அரசு செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.