Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா….. “20 நாள் கால்சீட்டுக்கு நயன் வாங்கும் சம்பளம்”…. இத்தனை கோடியா….????

நயன்தாரா வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா உலகில் உச்சநட்சத்திரமாக வளம் வருகின்றார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தற்பொழுது காட்பாதர், கனெக்ட், கோல்ட், நயன்தாரா 75 உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்கின்றார். நயன்தாரா சென்ற ஜூன் மாதம் 9-ம் தேதி தனது காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவரும் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில் நயன்தாரா தற்பொழுது விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள ஏகே 62 திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கின்றார். மேலும் இப்படத்திற்கு அவர் 10 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் தற்பொழுது அவரின் சம்பளம் குறித்து புதிய செய்தி ஒன்றை வெளியாகி இருக்கின்றது. அதன்படி நயன்தாரா 20 நாள் கால்சீட்டுக்கு ரூபாய் 10 கோடி சம்பளமாக வாங்குகின்றாராம். இதையடுத்து விளம்பர படங்களில் நடிக்க ரூபாய் 5 கோடி சம்பளமாக வாங்குவதாக சொல்லப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |