சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் ஒரே நாளில் அதாவது 24 மணி நேரத்தில் 68 குழந்தைகள் பிறந்துள்ளன.
சென்னையில் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை பிரசித்தி பெற்ற மருத்துவமனையாக விளங்குகிறது. இதில் நாள் ஒன்றுக்கு சுமார் 50 பிரசவங்கள் வரை நடைபெறுகின்றன. கடந்த ஆண்டில் 24 நேரத்தில் அதிக பட்சமாக 64 குழந்தைகள் பிறந்தன. இதே போல் இந்த ஆண்டும் நேற்று முன்தினம் மதியம் 12 மணியிலிருந்து இரவு 12 மணி வரை அதாவது 24 மணி நேரத்தில் 68 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் 39 ஆண் குழந்தைகள் மற்றும் 29 பெண் குழந்தைகள் ஆகும்.
தொடர் கனமழை காரணமாக தாம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் மழைநீர் தேங்கி இருந்ததால் அங்கிருந்த பல தாய்மார்கள் சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அங்கு ஒரே நாளில் அறுபத்தி எட்டு குழந்தைகள் பிறந்ததாக கூறுகின்றனர். தற்போது அறுபத்தி எட்டு குழந்தைகளும் தாய்மார்களும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.