Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! 24 வருடங்களாக ஐடி பிசினஸ்…. அமெரிக்காவில் கலக்கும் நெப்போலியன்….. நீங்க வேற லெவல் சார்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த  நெப்போலியன் நடிகர், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என அனைத்து வேடங்களிலும் அசத்தக்கூடியவர். இவரை தற்போது படங்களில் பார்ப்பது மிகவும் அரிதாக மாறிவிட்டது. ஏனெனில் நடிகர் நெப்போலியன் தற்போது தன்னுடைய குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அதாவது நடிகர் நெப்போலியனின் ஒரு மகனுக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் அமெரிக்காவுக்கு சென்ற நெப்போலியன் சிகிச்சைக்காக அங்கேயே தங்கி விட்டார். இவர் அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருக்கிறார். அமெரிக்காவில் வசித்து வரும் நெப்போலியன் அவ்வப்போது தான் விவசாயம் செய்து வரும் சில புகைப்படங்களை இணையதளத்தில் பகிர்ந்தார்.

இந்நிலையில் நடிகர் நெப்போலியன் உண்மையாகவே செய்யும் பிசினஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 23 வருடங்களாக ஜீவன் டெக்னாலஜிஸ் என்ற பெயரில் ஐடி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் பைனான்ஸ் தொடர்பான விஷயங்களை அவரது மனைவி கவனித்து வருகிறார். பொதுவாக நடிகர்-நடிகைகள் தங்கள் சம்பாதித்த பணத்தை வைத்து தயாரிப்பு நிறுவனங்கள் அல்லது சொத்து வாங்கிக் கொண்டு செட்டில் ஆகிவிடுவார்கள். ஆனால் நெப்போலியன் மட்டும் தான் சற்று வித்தியாசமாக ஐடி கம்பெனியை தொடங்கி நடத்தி வருகிறார்‌. மேலும் சமீபத்தில் அரசியலில் இருந்து நெப்போலியன் அதிக அளவில் படிக்கவில்லை என்றாலும் அமெரிக்காவில் ஐடி கம்பெனியை தொடங்கி பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறார்.

 

Categories

Tech |