ஒருவர் கைக்கடிகாரத்தை, விற்பனைக்காகக் கொண்டு சென்ற நிலையில், அதன் மதிப்பை கேட்டு, ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், பிரித்தானியர் ஒருவர் 449 பவுண்டுகளுக்கு கைக்கடிகாரம் ஒன்றை வாங்கியுள்ளார். இந்நிலையில் 1982ஆம் ஆண்டு, 483 பவுண்டுகளுக்கு அவர் அந்த கைக்கடிகாரத்தை தள்ளுபடி 34 பவுண்டுகள் போக , 449 பவுண்டுகள் கட்டணம் செலுத்தியுள்ளார்.
மேலும் கொஞ்சம் காலம் அதை அணிந்த பிறகு, ஒரு 30 ஆண்டுகளாக அதை பயன்படுத்தாமல் ஓரிடத்தில் வைத்திருந்திருக்கிறார். இதையடுத்து தற்போது அந்த கைக்கடிகாரத்தை, விற்பனைக்காகக் கொண்டு சென்ற நிலையில், அதன் மதிப்பை கேட்ட அவர் ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளார்.
இந்நிலையில் எடின்பர்கைச் சேர்ந்த அந்த நபர், Richard Price என்னும் நிபுணரிடம் அந்த கைக்கடிகாரத்தை கொண்டு செல்ல, அதை ஆராய்ந்து பார்த்த Richard, அந்த கைக்கடிகாரமானது, Rolex Submariner 1665 என்னும் அபூர்வ கைக்கடிகாரம் என்று கூறியுள்ளார்.
மேலும் தற்போது அந்தக் கைக்கடிகாரம் 18,000 முதல் 20,000 பவுண்டுகள் வரை விலை போகும் என்று Richard கூற, நம்பமுடியவில்லை என்று கூறி ஆச்சரியத்தில் அந்த கைக்கடிகாரத்தின் சொந்தக்காரர் வாய்பிளந்துவிட்டாராம்.. இதையடுத்து இச்செய்தி சமூக ஊடகம் ஒன்றில் வெளியாக, அதைப் படித்த மக்களும் ஆச்சரியத்தில் ஆழ்ந்திருப்பதாக கருத்துக்கள் தெரிவித்துவருகின்றனர்.