அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவருடைய உறவினர்கள் பெயரில் வாங்கிய சொத்துக்கள் உட்பட 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக இன்று சோதனை நடத்தினர். இதனையடுத்து சென்னை சாந்தோமில் இருக்கும் அவருடைய வீடு மற்றும் அவருக்கு சொந்தமான தங்கும் விடுதிகள், கல்லூரி, மண்டபம் உள்ளிட்ட இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுவரை லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில், ஐந்து கணினிகள், சொத்து ஆவணங்கள், ரூபாய் 34 லட்சம் பணம், ரோல்ஸ் ராய்ஸ் உட்பட 9 சொகுசு கார்கள் வீரமணி வீட்டில் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி 5 கிலோ தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7 கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை தகவல் தெரிவித்துள்ளது.