தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் இரண்டு நாட்களே இருக்கின்றன. இந்நிலையில் நாளையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். எனவே தேர்தல் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் மக்களிடையே பிரச்சாரம் மேற்கொள்வதற்காக அரசியல் கட்சியினர் சார்பாக வீடியோக்களும், பாடல்களும் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் யூ டியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட அரசியல் வீடியோக்களில் ஸ்டாலின்தான் வரலாறு பாடல் 5.1 கோடி பார்வையாளர்களை கடந்து முதலிடம் பிடித்துள்ளது. Narendra Modi -Aap Ki Adalat வீடியோ 5 கோடி பார்வையாளர்களையும், Phir Ek Baar Modi Sarkar வீடியோ 4 கோடி பார்வையாளர்களையும், அக்ஷய் குமாருடன் மோடியின் பேட்டி 3.5 கோடி பார்வையாளர்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.