பெய்ஜிங்கை சேர்ந்த ஒருவர் தனது வெல்டிங் கைவினை திறனை பயன்படுத்தி 5000 மொபைல்களை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்வதற்கு 27 மில்லியன் மில்லியம்பியர் போர்ட்டபிள் பவர் பேங்கை உருவாக்கியுள்ளார்.
வளர்ந்து வரும் காலங்களில் அனைவரும் அதிக அளவில் மொபைல் போன்களை உபயோகப்படுத்தி வருகிறோம். அதற்கு வேகமாக சார்ஜ் செய்வதற்காக பவர் பேங்கை பயன்படுத்தி வருகிறோம். நாம் பயணம் செய்யும் போதும், மின்சாரம் இல்லாத போதோ அனைவரும் பவர் பேங்கை தான் பயன்படுத்துகிறோம். தற்பொழுது பவர் பேங்கில் சில ஆயிரம் மெல்லியன் மணிநேரத்திற்கு மட்டும் செயல்படும் திறன்களை கொண்டுள்ளன.
இதைத் தொடர்ந்து வெல்டிங் கைவினை கலைஞர் ஹேண்டி கெங். அவர் தனது வெல்டிங் கைவினை திறனை பயன்படுத்தி போர்டேபில் பவர் பேங்க் தயாரிக்க நினைத்துள்ளார். இதை தொடர்ந்து உலோகக் சட்டத்தை தயாரித்துள்ளார், அதை ஒரு துருப்பிடிக்காத உருக்கு தாளை வெளிப்புறம் பயன்படுத்தி உள்ளே பகுதியில் நடுத்தர அளவிலான காரை இயக்கும் அளவிற்கு திறன் கொண்ட பேட்டரி கொண்டு 5.3 -3.9-0.98 என்ற அடி கணக்கில் உருவாகியுள்ளார். இது எம்ஐ பவர் பேங்க்கை போல தோற்றம் அழைப்பதாக கூறப்படுகிறது.
இந்த பவர் பேங்கில் எலக்ட்ரிக் பொருள்களை சார்ஜ் செய்வதற்காக 60 பவர் சாட்டுகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை பயன்படுத்தி வாஷிங் மெஷின், தொலைக்காட்சி, எலக்ட்ரிக் குக்கர் போன்ற இயந்திரங்களை இயக்கலாம். மேலும் இதனை மற்ற இடங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு டயர்கள் அமைக்கப்பட்டு அதில் கயிறு ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.