அமீரகம் என்பது பாரசீக வளைகுடாவில் அராபியத் தீபகற்பத்தின் தென்கிழக்கு முனையில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இதன் எல்லைகளாக கிழக்கே ஓமான், தெற்கே சவூதி அரேபியா ஆகிய நாடுகளும், உள்ளன. கத்தார், ஈரான் ஆகியவை கடல் எல்லைகளைக் கொண்டுள்ளன. 2013 ஆம் ஆன்டில் இதன் மக்கள்தொகை 9.2 மில்லியன்கள் ஆகும். இவர்களில் 1.4 மில். பேர் அமீரகத்தினரும், 7.8 மில்லியன் பேர் வெளிநாட்டினரும் ஆவார்.
இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதுண்டு. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது. இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்ந்துவருவதால், 2022ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 மில்லியனாக உயர்ந்துள்ளது. இவ்வளவு பேர்மூலம் இந்திய மதிப்பில் 41 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை ஆறே மாதத்தில் பெற்றுள்ளது அமீரகம். ஆண்டின் பிற்பகுதியான குளிர்கால சீசனில், சுற்றுலா வருவாய் இன்னும் கூடும் என எதிர்பார்ப்பதாக அமீரக அதிபர் தெரிவித்துள்ளார்.