ஒரு பெண் 11 குழந்தைகளை பெற்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்க நாட்டில் உள்ள டென்னசி பகுதியில் பிஹாய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 11 குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகளுக்கு மொத்தம் 8 தந்தைகள் என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இதனை பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு பிஹாய் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது. 8 ஆண்கள் மூலம் எனக்கு 11 குழந்தைகள் பிறந்துள்ளது. இதற்கு நான் வெட்கப்படவில்லை. நான் ஏன் வெட்க படனும் இது எனக்கு நன்மைதான். அதாவது உங்களிடம் ஒன்று இருந்தால் அந்த ஒன்றையும் எடுத்துக் கொண்டால் உங்களிடம் ஜீரோ மட்டுமே இருக்கும்.
ஆனால் உங்களிடம் 8 இருந்தால் அதிலிருந்து 3 எடுத்தால் 5 மட்டுமே இருக்கும் . இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் என் குழந்தைகளுக்கு ஒரு தந்தை மட்டும் இருந்தால் அவர் என்னை பிரிந்தாலோ அல்லது இறந்துவிட்டாலோ என் குழந்தைகள் தந்தையற்றவர்களாகி விடுவார்கள். ஆனால் இப்போது 8 பேரில் 3 பேர் இல்லை என்றாலும் 5 பேர் இருப்பார்கள் எனக் கூறியுள்ளார். இவரின் இந்த விளக்கத்தை பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர். மேலும் நான் பல குழந்தைகளை பெற்றுக் கொள்ள விரும்புகிறேன் என அவர் புன்னகையுடன் கூறியுள்ளார்.