Categories
லைப் ஸ்டைல்

அடேங்கப்பா! நாம் தினமும் சேர்க்கும் வெங்காயத்தில்…. இவ்வளவு நன்மைகளா…??

சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று இப்போது பார்க்கலாம்.

சமையலில் வெங்காயம் முக்கிய இடம் பிடிக்கிறது. எல்லாம் உணவிற்கும் நாம் வெங்காயம் அதிக அளவில் சேர்த்து வருகிறோம். சிறிய வெங்காயம் மற்றும் பல்லாரி எனப்படும் பெரிய வெங்காயம் இரண்டுமே ஒரே குணத்தைக் கொண்டவை. வெங்காயத்தில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் மற்றும் கந்தகம் ஆகியவை இருக்கின்றன. இவை காற்றில் பரவி வெங்காயத்தை உரிக்கும்போது நம் கண்களில் கண்ணீர் வரவழைக்கிறது . இப்போது வெங்காயத்தினை நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

1.வெங்காயத்தில் பலவித மருத்துவ குணங்கள் இருக்கின்றன. இது கிருமிகளை நீக்க பயன்படுகிறது.

2.இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு ஆகியவற்றில் தவிர்க்க உதவுகிறது.

3.ரத்த அழுத்தத்தை குறைக்கும். இழந்த சக்தியை மீட்கும்.  சளி மற்றும் இருமலை போக்குகிறது.

4.பால் உணர்வு தூண்டுவியாக கருதப்படுகிறது.

5.6.வெங்காயத்தை நசுக்கித் பாம்பு கடித்த இடத்தில தேய்க்க விஷம் இறங்கிவிடும்.

7.வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும்.

8.சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

9.திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

10.காதில் வலி ஏற்படும்போது வெங்காய சாற்றினை பிழிந்து காதில் இடும்போது காது வலி குணமாகிறது.

11.வெங்காயத்தை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து சாப்பிட பித்தம் குறையும்.

12.தலைமுடி வளர்ச்சிக்கும் வெங்காயம் உதவுகிறது

Categories

Tech |