இயக்குனர் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக இயக்கியுள்ளார். இதன் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதனால் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பட குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர்கள் வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகை திரிஷா ரூ. 3 கோடியும், கார்த்தி ரூ. 5 கோடியும், ஜெயம் ரவி ரூ. 8 கோடியும், ஐஸ்வர்யா ராய் ரூ. 10 கோடியும், விக்ரம் ரூ. 12 கோடியும் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் சம்பள விவரம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.