Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா! “உடல் அழுகவில்லை” 50,000 ஆண்டுகளுக்கு முன்பு…. வாழ்ந்த மிருகம் கண்டெடுப்பு…!!

50, 000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிருகம் ஒன்றின் உடல் அழுகாமல் பூமிக்கடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சைபீரியா நாட்டில் பனியுகத்தில் உறைந்து பூமிக்கு அடியில் இருந்த காண்டாமிருகம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பூமிக்கு அடியில் உறைந்த நிலையில் இருந்ததால் அந்த மிருகத்தின் உடல் அழுகாமல் இருந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த மிருகம் கடைசியாக உண்ட உணவு ஜீரணமாகாமல் வயிற்றில் அப்படியே இருந்து உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மிருகம் 2 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்து போய் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குட்டியை முதலில் அலெக்ஸி சவின் என்ற உள்ளூர்வாசி தான் கண்டுபிடித்துள்ளார். இதில்  ஆச்சரியம் என்னவென்றால், இந்த காண்டாமிருகம் சாஷா என்ற பெயரில் 2014 ஆம் வருடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரே குழந்தை காண்டாமிருக மாதிரி தளத்திற்கு பக்கத்தில் காணப்பட்டுள்ளது. சாகா ரிப்பப்ளிக்கின் அகாடமி ஆஃப் சயின்ஸின் பழங்காலவியல் நிபுணர் ஆல்பர்ட் புரோட்டோபோவின் மதிப்பீடுகளின்படி  குழந்தை காண்டாமிருகத்திற்கு சுமார் 3 முதல் 4 வயது இருந்திருக்கும் என்று தெரிவித்துள்ளது..

Categories

Tech |