முதல் ஓவரிலேயே 3 விக்கெட் நமீபியா அணியின் வீரர் ரூபன் டெம்பிள் மேன் வரலாற்று சாதனை படைத்தார்.
நடப்பு டி20 உலக கோப்பையின் நேற்றைய சூப்பர் 12 சுற்றில் ஸ்காட்லாந்து – நமீபியா அணிகள் மோதின. அதில் அரிதான சாதனை ஒன்றை படைத்துள்ளார் நமீபியா அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ரூபன் டெம்பிள் மேன். டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஆட்டத்தின் முதல் ஓபனிங் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அவர் அசத்தியுள்ளார்.
23 வயதான இவர் ஸ்காட்லாந்து வீரர்களான ஜார்ஜ் முன்ஷி, கேலம் மக்லியோ மற்றும் அந்த அணியின் கேப்டன் ரிச்சிவ் பெரிக்டன் என மூவரையும் டக் அவுட் செய்து ஆடுகளத்தை விட்டு அனுப்பினார். இந்த ஆட்டத்தில் நமீபியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.