Categories
தேசிய செய்திகள்

அடேய் ஏண்டா இப்படி…! பெண்களின் உள்ளாடைகளை திருடும் மர்ம நபர்கள்….. வெளியான பகீர் வீடியோ….!!!!!

மத்திய பிரதேசத்தில் மர்ம நபர் ஒருவர் பெண்களுடைய உள்ளாடைகளை திருடி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்தியபிரதேசம் மாநிலம் குவாலியர் என்ற இடத்தில் மர்ம நபர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து பெண்களுடைய உள்ளாடைகளை திருடி செல்வதாக காவல் நிலையத்தில் புகார் வந்துள்ளது. அதன்படி இது குறித்து விசாரணையில் காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர் குடியிருப்புக்குள் புகுந்து பெண்களுடைய உள்ளாடை திருடி செல்வதை பார்த்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அந்த மர்ம நபர் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

மேலும் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ள அந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று சந்தேகித்து அவரை அடையாளம் காண முயற்சி செய்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியிள் நீண்ட நாட்களாக பெண்களுடைய உள்ளாடைகள் திருடப்படுவதாக அந்த பகுதி மக்கள் போலீசில் தெரிவித்தனர். மேலும் இது சிறிய பிரச்சனை என்பதால் புகார் கொடுக்காமல் இருந்ததாகவும் அவர்கள் கூறினர். உள்ளாடைகளோடு சேர்த்து குர்தாவிலிருந்து 500 ரூபாயும் எடுத்து சென்றதாக ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். எதற்காக இந்த பெண்களின் உள்ளாடை திருடுகிறார்கள்? விற்பனைக்கு என்றால் பெண்களின் ஆடைகள் மட்டும் திருட வேண்டும் என்று போலீசாருக்கு சந்தேகம் வந்துள்ளது.

Categories

Tech |