Categories
உலக செய்திகள்

அடேய்! பையா அது அதிபருடா….? உங்க குசும்புக்கு அளவில்லையா…?

இலங்கை அதிபருக்கு ஒரு வாலிபர் அனுப்பிய மெசேஜ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி, அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தின் போது அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட மக்கள் அங்கிருந்த ரகசிய அறையில் இருந்து கோடி கணக்கில் மதிப்புள்ள பணத்தை எடுத்துள்ளனர்.

இந்த பணத்தை போராட்டக்காரர்கள் எண்ணும் வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், பணத்தை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிபர் மாளிகையில் போராட்டக்காரர்கள் தங்கி அங்குள்ள நீச்சல் குளத்தில் மகிழ்ச்சியாக குளிப்பது, தரையில் அமர்ந்து டி.வி பார்ப்பது, மாளிகையை சுற்றி பார்த்தல், பெட்ரூமில் உள்ள மெத்தையில் ஏறி குத்துச்சண்டை விளையாடுதல் போன்ற பல்வேறு விதமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பான வீடியோ மற்றும் போட்டோக்கள்  அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் அதிபர் மாளிகையில் இருக்கும் ஒரு வாலிபர்  கோத்தப்பய ராஜபக்சேவுக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார். அதில் ‘சார் வீட்ல சின்ன பின் சார்ஜர் ஒன்னு இல்லையா’ என கேட்டுள்ளார். இதற்கு கோத்தப்பய ராஜபக்சே தரப்பிலிருந்து முழு விவரமும் கேட்கப்பட்டு பதில் வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் வாலிபர் சின்ன பின் சார்ஜர் இல்லையா என்று அதிபரிடம் கேட்ட குறுஞ்செய்தி தொடர்பான ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |