விஜய் பீஸ்ட் படக்குழுவினருக்கு விருந்தளித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் பீஸ்ட். திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் விஜய் ரசிகர்களுக்கும் எதிர்பார்த்த அளவில் படம் அமையவில்லை. இதனால் படக்குழுவினர் சோகத்தில் இருந்தார்கள். இந்த நிலையில் விஜய் பீஸ்ட் படக்குழுவினருக்கு விருந்து கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படத்தை இயக்குனர் நெல்சன் தனது இன்ஸ்டால் பக்கத்தில் பகிர்ந்து கூறியுள்ளதாவது, “முழு படக்குழுவுடன் வேடிக்கை நிறைந்த மற்றும் மறக்க முடியாத மாலை நேரம். விஜய் சாரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. அவருடன் பணியாற்றிய தருணம் சிறப்பானது. இதற்கு நான் பெருமை படுகின்றேன். சன் பிக்சர்ஸ், கலாநிதி மாறன், காவியா மாறன் உள்ளிட்டோர் மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்ததற்காகவும் ஒன்றிணைத்தததற்காகவும் நன்றி. நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் இல்லாமல் இவை எதுவும் சாத்தியமில்லை. ஆதரவு தெரிவித்த பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றி. எப்போதும் போல நீங்கள் அனைவரும் விஜய் சார் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருடன் நின்று இந்த படத்தை மாபெரும் வெற்றியடைய செய்திருக்கிறீர்கள்” என பதிவிட்டுள்ளார்.