சென்னையில் பேஸ் 1 திட்டத்தின் கீழ் நீல வழித்தடம், பச்சை வழித்தடம் என இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனை கீழம்பாக்கம் வரை நீட்டிக்கும் திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்த கட்டமாக பேஸ் 2 திட்டத்தில் ஊதா வழித்தடம், காவி வழித்தடம், சிவப்பு வழித்தடம் என மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. மொத்தம் 118.9 கிலோமீட்டர் தூரத்திற்கான பேஸ் 2 மெட்ரோ திட்ட பணிகள் 2026 வருடம் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் ஊதா வழித்தடத்தில் கெல்லீஸ் முதல் தரமணி வரை சுரங்க பாதையில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமையப் போகின்றது. மேலும் இது அடையாறு ஆறு மற்றும் சேத்துப்பட்டு ஏரி போன்றவற்றின் வழியே செல்கின்றது. அதிலும் குறிப்பாக kmc மற்றும் சேத்துப்பட்டு மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையே நீருக்கடியில் சுமார் 30 மீட்டர் ஆழத்தில் சுரங்க பாதை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதேபோன்று கிரீன்வேஸ் ரோடு மற்றும் அடையாறு ஜங்ஷன் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையில் அடையாறு ஆற்றின் கீழ் இரட்டை சுரங்க பாதைகள் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான ஒப்பந்தம் எல் & டி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனம் நீருக்கு அடியில் மண் பரிசோதனை செய்யும் நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறது.
இந்த நிலையில் நீருக்கடியில் சுரங்க மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் வழிமுறைகள் பற்றி முக்கிய தகவல்கள் வெளியாகியிருக்கிறது. முதலில் சி எம் ஆர் எல் மற்றும் ஒப்பந்ததாரர்கள் தனித்தனியே மண் பரிசோதனை செய்கின்றார்கள். இதற்கான துளையிடும் இயந்திரத்துடன் pontoon இணைத்து செலுத்தப்படும். இது மண்ணை எடுத்து வருவதற்கு உதவியாக இருக்கிறது. அதன்பின் புவியியலாளர் மண்ணை பரிசோதித்து என்ன வகை அதன் நிகழ்வு தன்மை பற்றி ஆராய்வார் மேலும் மண் பரிசோதனை முடிவுகள் ஒப்பீடு செய்யப்பட்டு தகுதியான இடம்தானா என்பது உறுதி செய்யப்படுகிறது. இதனை அடுத்து கூழ் எந்திரம் ஒன்று குழம்பு போன்ற கலவையுடன் உள்ளே செலுத்தப்படுகிறது. இது போர்ஹோல் போடுவதற்கு உதவிகரமாக இருக்கும் இரண்டாவதாக சுரங்க போரிங் இயந்திரங்களின் கட்டர்கள் மண்ணிற்குள் இறக்கப்பட்டு அடிப்பகுதியை கெட்டியாக பிடித்துக் கொள்ள செய்யப்படுகின்றது. அதன் வழியாக சிமெண்ட் மற்றும் கெமிக்கல் கலந்த கலவை அடிப்பகுதியை நோக்கி தெளிக்கப்படுகின்றது. இதன் தொடர்ச்சியாக கான்கிரீட் செக்மெண்ட்ஸ் போடப்படுகின்றது.
மொத்தம் ஆறு செக்மென்ட்ஸ் சேர்ந்தது ஒரு ரிங் அதன் பின் கூடுதலாக கூழ் போன்ற கலவை செலுத்தப்படுகிறது. இது அடிப்பகுதியை வலுவாக பிடித்துக் கொண்டு நீர் கசிவிலிருந்து தடுக்க உதவுகின்றது. பின்னர் சுரங்கப்பாதை அமைக்கும் இயந்திரம் மற்றும் நீரின் அடிப்பகுதி போன்றவற்றின் அழுத்தம் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுகின்றது. இவை எல்லாம் சரியாக இயங்கும் பட்சத்தில் அடுத்தடுத்து ரிங்குகள் அமைக்கும் பணிகள் முடக்கிவிடப்படும் ரிங்குகள் அமைத்து விட்டால் அதன் பின் கட்டுமான பணிகள் எளிதாகிவிடும் என கூறப்படுகின்றது.