Categories
சினிமா தமிழ் சினிமா

அடையாளமே தெரியலையே… தனுஷ், சிம்பு பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

நடிகை ரிச்சா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான மயக்கம் என்ன படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரிச்சா. இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து இவர் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக ஒஸ்தி படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து இவர் பல படங்களில் நடிப்பார் எதிர்பார்த்த நிலையில் ஜியோ என்பவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார்.

Image

சமீபத்தில் நடிகை ரிச்சா கர்ப்பமாக இருப்பதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதன் பின் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகை ரிச்சா ‘அடுத்த மாதம் குழந்தை பிறந்துவிடும்’ என பதிவிட்டு தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் நடிகை ரிச்சா உடல் எடை கூடி அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிவிட்டதாக ரசிகர்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |