பிரபல நடிகை குஷ்புவின் சிறுவயது புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது .
தமிழ் திரையுலகில் நடிகை குஷ்பூ ‘தர்மத்தின் தலைவன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர். இதையடுத்து இவர் பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்து அசத்தினார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய அளவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்தார் . வெள்ளித்திரையில் கதாநாயகியாக கலக்கி வந்த குஷ்பூ பின் சின்னத்திரை தொடர்களில் நடித்தது மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றார்.
தற்போது நடிகை குஷ்பூ சினிமாவில் இருந்து சற்று விலகி அரசியலில் களம் இறங்கியுள்ளார் . இந்நிலையில் குஷ்புவின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் சிறுவயதில் குஷ்பூ மெலிந்த தோற்றத்தில் இருப்பதாக கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர் .