நடிகர் விஜய் சேதுபதியின் இளம் வயது புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் நடிகர் விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து இவர் பீட்சா, சூதுகவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். சமீபத்தில் இவர் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் திரையரங்குகளில் வெளியான இந்த படம் வசூலை வாரிக் குவித்தது .
தற்போது நடிகர் விஜய் சேதுபதி தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார் . இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியின் இளம் வயது புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகர் விஜய் சேதுபதியா இது! என ஆச்சரியமடைந்துள்ளனர்.