Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அடையாளம் தெரியாத கப்பல் கரை ஒதுங்கியதால் பரபரப்பு …!!

 குளச்சல் கடல் பகுதியில் அடையாளம் தெரியாத கப்பல் ஒன்று நேற்று இரவு முதல் நின்று கொண்டிருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

குமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதியில் அதிகாலையில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் அதனை பார்த்து இது எந்த நாட்டு கப்பல் என்று தெரியாததால் குளச்சல் கடலோர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விரைந்து வந்த கடலோர காவல் நிலைய போலீசார் சர்வதேச நீர் வழித் தடத்தில் இருப்பதாக குளச்சல் கடல் பகுதிக்கு இயந்திரக் கோளாறு காரணமாக தவறி வந்த கப்பலா  அல்லது சோதனைக்கப்பலா  என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கப்பல் எதற்காக இப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும்  அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை எனவும்  தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |