லண்டனில் அடையாளம் தெரியாத நபர் ஒரு வீட்டின் மீது கல்லை எரித்து ஜன்னலை உடைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லண்டன் கோல்னியில் கடந்த மாதம் 31ஆம் தேதி மாலை 6 மணி அளவில் அங்குள்ள ஒரு வீட்டின் ஜன்னல் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கற்களை வேகமாக வீசி ஜன்னலை சுக்குநூறாக உடைத்துள்ளார். மேலும் கற்களை வீசிவிட்டு அவர் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து கற்களை வீசிய நபர் யார் என்றும், எதற்காக இதை செய்தார் என்றும் தெரியவில்லை.
இதனைத்தொடர்ந்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை பாபார்வையிட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அந்த கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வெளியிட்டு இந்த நபரை அடையாளம் கண்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கவேண்டும் என காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.