பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் அஞ்சலக கோட்ட அலுவலம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இலக்கை அடைய முடியாத அஞ்சல் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை நிறுத்த வேண்டும் என்றும், பணி நேரங்களில் நெட்ஒர்க், சர்வர் பிரச்சினையால் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய சேவைகளை வழங்க முடியாமலும் இருப்பதையும் சரி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆர்பாட்டத்திற்கு கோட்ட செயலாளர் தர்மலிங்கம் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து கோட்ட தலைவர் சக்திவேல், பொருளாளர் நித்யானந்த் உள்ளிட்ட பலரும் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர். மேலும் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் விண்ணப்பிக்கும் அடையாள அட்டையை எவ்வித நிபந்தைகளும் இன்றி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.