போன்பே மூலமாக இந்த சலுகையை பயன்படுத்தி நீங்கள் தங்கம் வாங்கினால் பல ஆஃபர்களை பெறலாம் .
அட்சயதிருதி வருகிறது, இந்த நாளன்று நீங்கள் தங்கம் வாங்க திட்டமிட்டு இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு பயன்படும். டிஜிட்டல் பரிவர்த்தனை செயலியான போன்பே அட்சய திருதியை முன்னிட்டு மொபைல் ஆப் மூலமாக தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவதற்கான சலுகையை அறிவித்துள்ளது. இந்த செயலி மூலம் பயனாளர்கள் 999 தூய்மையான தங்கத்தை வாங்க முடியும். போன் பே மூலமாக இந்த சலுகையில் தங்கம் வாங்கினால் அதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. மேலும் தங்க நாணயங்கள் அல்லது கட்டிகள் வடிவில் தங்கத்தையும் நீங்கள் வீட்டிலேயே டெலிவரி செய்து வாங்கிக்கொள்ளலாம்.
போன் பே மூலம் வாங்கினால் அதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. இந்த சிறப்பு சலுகை திட்டத்தின்கீழ் வாடிக்கையாளர்கள் தங்கம் வாங்கினால் ரூ.2,500 வரை கேஷ்பேக் பெறலாம், வெள்ளி நாணயங்கள் அல்லது கட்டிகளை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் ரூ.250 வரை கேஷ்பேக் பெற முடியும். இந்தச் சலுகை மே 3ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும். அதற்குள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.