Categories
அரசியல்

அட்சய திருதியை…. கையில் பணம் இல்லையா?…. தங்கம் வாங்க சூப்பர் வாய்ப்பு…. அசத்தலான அறிவிப்பு….!!!

2022 ஆம் ஆண்டு அட்சய திருதியை வந்துவிட்டது. இந்த நன்னாளில் தங்கம் உள்ளிட்ட பொருட்களை வாங்கினால் செல்வம் பெருகும் என்று நம்புகிறார்கள். அதை வாங்குவதற்கு நிறைய பேர் திட்டமிட்டுள்ளனர். ஆனால் பலரிடம் கைவசம் பணம் இருக்காது. இதுபோன்ற நெருக்கடியான சூழலில் உதவுவதற்காக இந்தியன் பேங்க் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி wave என்ற பெயரில் இந்தியன் பேங்க் தற்போது அறிவித்துள்ள சிறப்பு திட்டத்தில் முன்கூட்டிய ஒப்புதல் பெற்ற தனிநபர் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த கடனை வாங்குவதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் தேவை இல்லை. அதில் வாங்கும் கடனுக்கு ஆண்டுக்கு 10% வட்டி மட்டும் நீங்கள் செலுத்தினால் போதுமானது. இந்தியன் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் இந்த சலுகையை பயன்படுத்தலாம். அவர்களது சம்பளம் அல்லது பென்ஷன் தொகை சம்பளம் கணக்கில் வருவதாக இருக்க வேண்டும். மொபைல் ஆப் அல்லது வெப்சைட் மூலமாக இந்த கடனை நீங்கள் வாங்கலாம். வங்கிக் கிளைக்கு அலைய வேண்டிய அவசியமும் இல்லை.

Categories

Tech |