இந்தியாவில் காலங்காலமாக பெரும்பாலானோர் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். தங்க நகை, நாணயம் மற்றும் கட்டி என பல்வேறு வடிவில் தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். குறிப்பாக இந்திய மக்கள் அட்சய திருதியில் அதிக அளவு தங்க நகை வாங்குவார்கள். அட்சய திருதியை பண்டிகை இந்து மக்கள் கொண்டாடி வரும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று. இந்த நன்னாளில் எந்தப் பொருள் வாங்கினாலும் அது பலமடங்கு பெருகும் என்பதும், அதிர்ஷ்டம் வளரும் என்பதும் நம்பிக்கை.
அதன்படி வருகின்ற மே 3ஆம் தேதி அட்சய திருதியை கொண்டாடப்பட உள்ளது. அன்றைய நாளில் தங்கம் மற்றும் வெள்ளி போன்ற நகைகளை பொதுமக்கள் வாங்குவது வழக்கம். அதனால் அன்று வியாபாரம் களைகட்டும். இருந்தாலும் தங்கம் வாங்குவது தற்போது மிகவும் எளிதாகிவிட்டது. அதிலும் மிகக் குறைந்த விலைக்கு கூட சொல்லப்போனால் ஒரு ரூபாய்க்கு கூட தங்கம் வாங்குவதற்கான வசதிகள் தற்போது வந்துவிட்டது. இதற்குப் பெயர்தான் டிஜிட்டல் தங்கம். டிஜிட்டல் தங்கம் என்பது கூகுள் பே, போன் பே போன்ற ஆப்கள் மூலமாக வாங்குவது.
அதில் வெறும் ஒரு ரூபாய் கூட நீங்கள் தங்கம் வாங்கலாம். அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள முடியும். நீங்கள் வாங்கக்கூடிய தங்கம் உங்களது பெயரில் தனி லாக்கரில் சேமித்து வைக்கப்படும். உங்களுக்கு தேவைப்படும் போது அதனை விற்று லாபத்தை எடுத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் டெலிவரி செய்து வீட்டுக்கே கொண்டு வந்து விடலாம். இது முழுக்க முழுக்க பாதுகாப்பானதுதான்.
அதில் 24 கேரட் 999.9 சுத்தமான தங்கம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்க நாணயம் ஆகவும் தங்க கட்டியாகவும் அதனை வாங்கிக் கொள்ளலாம். கூகுள் பே, போன்பே போன்ற டிஜிட்டல் அப்களிலும், Paytm money, HDFC securities, motilal Oswal போன்ற தளங்களிலும் நீங்கள் டிஜிட்டல் தங்கம் வாங்கலாம்.