பல வருடங்களாக சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் போராடிக்கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவரான காயத்ரி ரெமா காசு மேல் காசு, ஹரஹர மகாதேவகி, மோகினி, டூரிங் டாக்கீஸ், செம்ம உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இருப்பினும் சினிமாத்துறையில் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாமல் போராடி கொண்டிருக்கும் காயத்ரி அண்மையில் பரபரப்பு கருத்து ஒன்றை கூறியிருக்கிறார்.
அதாவது காயத்ரி ரெமா சினிமாவில் வாய்ப்பு கேட்டு பல இடங்களுக்கு சென்றிருக்கிறார். அவ்வாறு வாய்ப்பு தேடி செல்லும் இடங்களில் பலரும் தன்னை அட்ஜஸ்ட்மெண்ட்க்கு அழைப்பதாக காயத்ரி கூறியிருக்கிறார். அதாவது சினிமா துறையில் 95% பேர் என்னை பொருத்தவரை அட்ஜஸ்ட்மென்ட் பண்ண கேட்டனர். இதனாலேயே பல பட வாய்ப்புகளையும் இழந்துள்ளதாக காயத்ரி வேதனை தெரிவித்துள்ளார்.