பிரபல நடிகை, பிரபல நடிகர் ஒருவர் தன்னை அட்ஜஸ்ட் செய்ய சொல்லியதாக பேட்டியில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நடிகை இஷா கோபிகர் என் சுவாசக் காற்றே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதையடுத்து நெஞ்சினிலே, ஜோடி, நரசிம்மா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அண்மையில் இவர் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது கூறியுள்ளதாவது, சினிமாவுக்காக அட்ஜஸ்ட் செய்யக்கோரி வலியுறுத்தும் நிலைமை இங்கே அதிகமாகி உள்ளது.
நானே ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான போது படத்தின் தயாரிப்பாளர் ஒரு நடிகருடன் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வற்புறுத்தினார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். இதனால் அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தேன். இதுபோல பல சமயத்தில் அட்ஜஸ்ட் செய்ய மறுத்ததால் பல பட வாய்ப்புகளை இழந்து இருக்கின்றேன்” என கூறியுள்ளார். இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது தமிழில் அயலான் திரைப்படத்தில் நடித்துள்ளார் குறிப்பிடத்தக்கது.