சற்று முன் நடந்து முடிந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான முதற்கட்ட தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த அடிப்படையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான ஒப்புதலை தமிழக அமைச்சரவை வழங்கி இருக்கிறது. இது மிக முக்கியமான விஷயமாக பார்க்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ மாணவர் சேர்க்கையின்போது பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறார்கள்.
நீட் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளை சந்திக்கும்போது அரசு பள்ளி மாணவர்கள் பல்வேறு விஷயங்களில் பின்தங்கி இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் ஒதுக்கீடு என்பது வழங்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல் அமைச்சர் அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பு குறித்து தற்போது நடந்து முடிந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது . அவர்களுக்கு 10% அந்த உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் 7.5 சதவீதம் உள்ளஒதுக்கீடு வழங்க இன்று அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் வழங்கி இருக்கின்றது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான ஒப்புதலைஎடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு பள்ளியில் மாணவர்களை சேர்த்த பெற்றோர்கள் தமிழக அரசை பாராட்டி வருகின்றனர். அதே போல 5000 கோடி முதலீடுகள் செய்யும் 6 தொழில் நிறுவனங்களுக்கும் தமிழக அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.