Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அட்டகாசமான ருசியில்… டிரை ஃப்ரூட் சிக்கி ரெசிபி..!!!.

பாதாம்                                – கால் கப்
முந்திரி                                – கால் கப்
வறுத்த வேர்க்கடலை  – கால் கப்
வறுத்த வெள்ளை எள் – கால் கப்
பொடித்த வெல்லம்      – ஒரு கப்
நெய்                                     – ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் பாதாம், முந்திரி, வறுத்த வேர்க்கடலையை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு உருக்கி, வெல்லம் சேர்த்து கிளறி, வெல்லம் கரைந்ததும் அடுப்பை சிறுதீயில் வைத்து, அதனுடன் பாதாம், முந்திரி, வேர்க்கடலை, எள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கிளறவும்.

பிறகு அதை சுத்தமான நெய் தடவிய பிளேட்டில் கொட்டி கனமாக தேய்த்து, ஐந்து நிமிடங்களுக்கு பிறகு துண்டுகளாக்கி, காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து வைக்கவும். இப்போது சுவையான டிரை ஃப்ரூட் சிக்கி தயார்.

Categories

Tech |