தோட்டங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்திலுள்ள மத்தளம் பாறையிலிருந்து கடையம் வரை இருக்கும் மலை அடிவாரப் பகுதியில் தோட்டங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 8 யானைகள் 20 நாட்களுக்கும் மேலாக இங்குள்ள தோட்டங்களில் முகாமிட்டுள்ளது.
மேலும் இந்த யானைகள் தோட்டத்தில் உள்ள தென்னை, வாழை போன்ற மரங்களை பிடுங்கி அட்டகாசம் செய்துள்ளது. இது குறித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு பட்டாசுகளை வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.