Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்யும் ஒற்றை யானை…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

தேயிலை தோட்டத்தில் ஒற்றை காட்டு யானை சுற்றி வருவதால் தொழிலாளர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நஞ்சப்பசத்திரம் பகுதியில் காட்டு யானை ஒன்று அங்குமிங்கும் சுற்றி திரிகிறது. இந்த காட்டு யானையை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் காட்டு யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டுள்ளது. இந்நிலையில் காட்டுயானை அப்பகுதியில் இருக்கும் தேயிலை தோட்டங்களில் உலா வந்துள்ளது.

இதனால் பச்சை தேயிலை பறிக்கும் பணியானது பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தோட்டங்களுக்கு செல்ல தொழிலாளர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |